ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான கோட்டா கோ கம போராட்டக்களத்தில் மீண்டும் மக்கள் வௌ்ளம் குழுமியுள்ளது.
கடந்த ஒன்பதாம் திகதி நடைபெற்ற அறவழிப் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் மற்றும் மஹிந்த ராஜபக்சவின் பதவி விலகல் போன்ற சம்பவங்களின் பின்னர் காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் கலந்து கொள்கின்றவர்களின் எண்ணிக்கையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.
50 ஆவது நாளாக தொடரும் மக்கள் எழுச்சி போராட்டம்
எனினும் ஐம்பது நாட்கள் தொடரும் போராட்டத்திற்கு இன்றைய தினம் நாட்டின் நாலா பக்கங்களிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் போராட்டக்களத்தை வந்தடைந்துள்ளனர்.
அத்துடன் இன்றைய இரவில் போராட்டக்களம் மீண்டும் உத்வேகம் பெற்றுள்ளதுடன் ஏராளமான புதிய நிகழ்வுகளும் போராட்டக் களத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.