நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் பல மணிநேரங்கள் காத்திருக்கின்ற அவலம் தற்போது வரை நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் வவுனியா பகுதியில் அதிக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இருந்தும் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மட்டும் டீசல் வழங்கப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள்.
வாகனத்துடன் காத்திருக்கும் மக்கள்
வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் மாத்திரமே டீசல் பெற்றுக்கொள்ளகூடிய நிலை இருப்பதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா – மன்னார் சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மாத்திரமே டீசல் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.