காலிமுகத்திடல் பகுதியில் கோட்டாகோகம உருவாக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 53ஆவது நாளாகவும் இன்று தொடர்ந்து வருகிறது.
தொடரும் போராட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை பதவி விலக வலியுறுத்தி தொடர்ந்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதேவேளை தொடர்ந்தும் ஜனாதிபதி செயலக நுழைவாயில் போராட்டக்காரர்களின் முற்றுகைக்குள் இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை
இதேவேளை இன்று அதிகாலை முதல் கொழும்பின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் காலிமுகத்திடல் பகுதியில் பலத்த காற்று காரணமாக கோட்டாகோகம பகுதியில் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் தூக்கி எறியப்பட்டு சேதமடைந்துள்ளன.
எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.