ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்க கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார்.
இதன் பிரகாரம் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் அக்கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்த்தனவின் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பான விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் தற்போதைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருக்கின்றார்.
எனவே கட்சி நடவடிக்கைகள் தொய்வு ஏற்படாமல் இருக்கவே அவர் தற்போதைக்கு ருவன் விஜேவர்த்தனவிடம் அதனைக் கையளித்துள்ளார்.
அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் சிறிகொத்தா தலைமையகத்தை மையமாகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.