இலங்கையில் டெங்கு நோய் மீண்டும் தீவிரமாக தலையெடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆண்டில் கடந்து போன ஐந்து மாதங்களுக்குள் மட்டும் 24, 523 டெங்கு நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர். அதிலும் மே மாதம் தொடக்கம் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
மேல் மாகாணத்தில் தீவிரமடையும் டெங்கு
கடந்த மே மாதத்தில் மட்டும் 6483 டெங்கு நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். ஜூன் மாதம் முதலாம் திகதி மட்டும் டெங்குநோயாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 313 நோயாளிகள் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் டெங்கு தீவிரமாக பரவி வரும் அதே வேளை, கண்டி, காலி, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கேகாலை மற்றும் ரத்தினபுரி மாவட்டங்களிலும் டெங்கு நோயின் தாக்கம் காணப்படுகின்றது.