முப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சந்திப்பிற்கான காரணம்
முப்படைகளின் பிரதம அதிகாரியாக கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடும் சம்பிரதாய வழக்கத்தின் அடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரைத் தொடர்ந்து குறித்த சம்பிரதாயத்தின் அடிப்படையில் இராணுவத்தளபதி விகும் லியனகேயும் ஜனாதிபதி கோட்டாபயவை இன்று சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்புகளின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்தினவும் உடனிருந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.