இலங்கை, இணக்கமான பிரிவினைக்கு இணங்கினால், இலங்கையின் 52 பில்லியன் டொலர் (5200 கோடி) வெளிநாட்டு கடனை செலுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக உள்ளதாக “பைடனுக்கான தமிழர்கள்” இயக்குனர் அறிவித்துள்ளதாக தினக்குரல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த முடிவு தொடர்பான அவர்களது செய்திக் குறிப்பில், இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் பொருளாதாரச் சிக்கலின்றி வாழக்கூடியது.
தமிழ் தேசத்தில் பொருளாதாரம், பிற நிறுவனங்களை நடத்துவதற்கு புலம்பெயர் தேசத்தின் திறமையான உறுப்பினர்களை தமிழர்கள் கொண்டு வருவார்கள்.
இலங்கை இணக்கமான பிரிவினைக்கு இணங்கினால், புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கைக்கு அதன் வெளிநாட்டுக் கடனில் 52 பில்லியன் டொலரை செலுத்த உதவுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.