செப்டெம்பர் மாதத்தில் இலங்கையில் பாரிய உணவு நெருக்கடி ஏற்படும் எனவும், இதன் தாக்கம் 2024ம் ஆண்டு வரை இலங்கையில் நீடிக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
எதிர்காலத்தில் இந்த நாட்டில் பலர் இரண்டு வேளை உணவை ஈடுசெய்ய வேண்டிய நிலை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2024ம் ஆண்டு வரை இலங்கையில் நீடிக்கும் நெருக்கடி
உக்ரைன் ரஷ்ய போர் நாட்டின் பொருளாதார நெருக்கடியை அதிகப்படுத்தலாம். பொருளாதார நெருக்கடியின் தாக்கம் இப்போதுதான் ஆரம்பமாகிவிட்டது. உக்ரைன்-ரஷ்யா போரின் முழு தாக்கத்தை இலங்கை இன்னும் அனுபவிக்கவில்லை என்றும் பிரதமர் கூறினார்.
செப்டெம்பர் மாதத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் எனவும், இதன் தாக்கம் 2024ம் ஆண்டு வரை இலங்கையில் நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகளவில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கு மேலதிகமாக பருவங்களில் பயிர்களை பயிரிடுவதில் தோல்வியடைந்துள்ளதாகவும் அதனால் இந்நாட்டு மக்கள் ஒரு நேரம் மட்டுமே உண்ண வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.