நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தல் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சூர்யா, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து விட்டார்.
தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஏக்கத்தில் ரசிகர்கள்
ரசிகர்கள் மட்டுமல்லாமல் கோடம்பாக்கத்தினரும் காதலர்களாக வலம்வரும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரின் திருமணத்தையும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
அண்மையில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் வெளியானது. இந்தப்படத்தின் ரிலீசுக்காக தான் தங்களின் திருமணம் தள்ளி போனதாக ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்தார் விக்னேஷ் சிவன்.
இந்நிலையில் இவர்களின் திருமணம் விரைவில் திருப்பதியில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதனை தொடர்ந்து மகாபலிபுரத்திற்கு இவர்களின் திருமணம் மாற்றப்பட்டது.
இடம்மாற்றப்பட்டது ஏன்?
திருமணத்திற்கு கிட்டத்தட்ட 200 பேர் வருவார்கள், அதுவும் பலரும் விஐபி என்பதால் பாதுகாப்பு கொடுப்பது கஷ்டம் என்பதால் தான் திருப்பதியில் திருமணம் நடத்த அனுமதி கிடைக்கவில்லை என சொல்லப்பட்டது.
ஆனால் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வின் வீடியோ உரிமையை ஒரு பிரபல ஓடிடிக்கு ஒரு பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதால், அவர்கள் இந்த திருமண நிகழ்வை கலர்புல்லாக காட்ட பிளான் போட்டுள்ளனர். இதன் காரணமாகவே இவர்களின் மகாபலிபுரத்திக்கு மாற்றப்பட்டுள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.




















