நாட்டில் டீசல் தட்டுப்பாடு தீவிர நிலையை எட்டியுள்ளதால் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் தனியார் பேருந்து சேவையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பல பகுதிகளில் தனியார் பேருந்துகள் எரிபொருளுக்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிறுத்தப்பட்டிருந்தன.
பேருந்துகள் மாத்திரமின்றி, ஏராளமான லொறிகளும், எரிபொருள் பெறலாம் என்ற நம்பிக்கையில், இரவு முதல் காலை வரை, வீதியின் இருபுறமும், வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
போதுமான பேருந்துகள் சேவையில் இன்மையால் நீண்ட நேரம் காத்திருந்து தமது பயணங்களை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.