எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி முதல் போக்குவரத்துத் துறையின் முன்னேற்றத்திற்காக கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை நேற்றைய தினம் (04-06-2022) அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது நிலவும் பொதுப் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் போக்குவரத்து அமைச்சர் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் நிறுவனங்களின் தலைவர்களுக்கு இடையில் இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் சந்திப்பொன்று இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், அன்றாட நடவடிக்கைகளுக்கான போக்குவரத்து மற்றும் அலுவலகள், பள்ளி மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் போன்றவை சில நாட்களுக்குள் மேம்படுத்த பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.