இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் இலங்கை இராணுவத்தினால் கடந்த 18ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு விஹாரமகா தேவிப்பூங்காவின் திறந்த வெளியரங்கில் வாரத்தில் திங்கள் தொடக்கம் சனிக்கிழமை வரை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை இப்பணி இடம் பெறுகின்றதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
சினோபாம் தடுப்பூசி 1வது மற்றும் 2வது டோஸ்களும் பைஸர் தடுப்பூசி 1வதுஇ 2வதுஇ 3வது மற்றும் 4வது டோஸ்களும் போடப்படுகின்றது.
மேலும் இன்று தடுப்பூசி போடுவதற்காக மக்கள் வருகை தந்து தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டு சென்றதை அவதானிக்க முடிந்தது.