மசாலா நிறைந்த உணவுகளுக்கு வாசனை அளிக்கும் விதமாக உணவு தயாரிப்பில் பிரியாணி இலை பயன்படுத்தப்படுகிறது.
பிரியாணி இலை உடலுக்கு நன்மை அளிப்பதோடு, மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன.
பிரியாணி இலையில் இருந்து எடுக்கப்படும் சாறு பல்வேறு மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது.
பிரியாணி இலையில் உள்ள சத்துக்கள்
100 கிராம் அளவிலான பிரியாணி இலையில் 314 கலோரிகள், 8 கிராம் கொழுப்பு மற்றும் 8 கிராம் புரதங்கள் உள்ளன.
இதுமட்டுமல்லாது, இதில், வைட்டமின் ஏ, சி, பி6, இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் கால்சியம் அதிகளவில் உள்ளது.
பிரியாணி இலைகளை சர்க்கரை நோயாளி உணவில் சேர்ப்பது பாதுகாப்பானதா?
பிரியாணி இலைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
உயிர்வேதியியல் ஊட்டச்சத்து இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 6 மாதங்களுக்கும் மேலாக தங்கள் உணவில் பிரியாணி இலைகளைச் சேர்த்த பிறகு குளுக்கோஸ் அளவு குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
கொலஸ்ட்ரால் அளவிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
ஏனென்றால், பிரியாணி இலைகள் இயற்கையாகவே பாலிஃபீனால் எனப்படும் செயலில் உள்ள சேர்மங்களால் நிரம்பியுள்ளன.
இது குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இருப்பினும், நீங்கள் ஏற்கனவே இரத்த சர்க்கரை மருந்தின் கீழ் இருந்தால் பிரியாணி இலைகளை உணவில் சேர்ப்பது சர்க்கரை அளவைக் குறைக்கும்.
பக்கவிளைவுகள்
பே லாரல் பிரியாணி இலையை வெறுமனே சாப்பிட்டால், அது முழுமையாக ஜீரணம் ஆகாது.
கர்ப்பகாலம், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், பிரியாணி இலையின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.
பிரியாணி இலையின் சாற்றை தொடர்ந்து அருந்தி வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து விடும்.
அதேபோல், நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்பட வழிவகுக்கின்றன.
பிரியாணி இலைகள், சமையலுக்கு வாசனை ஊட்ட பழங்காலங்களில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த இலையின் சாறை எந்தளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற வரைமுறை இதுவரை வரையறுக்கப்படவில்லை.
இருமலை குணப்படுத்தும் பிரியாணி இலை டீ
பே லாரல் வகை பிரியாணி இலையை, தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் சிறிது இஞ்சி சேர்த்து குடித்து வந்தால், இருமலுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கிறது.
இதுமட்டுமல்லாது, அஜீரணம், தலைவலி உள்ளிட்டவைகளையும் தீர்க்கிறது.
இந்த டீயை, நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தி வந்தால் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை.