இது பௌத்த நாடா?
அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யப்பட்ட விதத்தை பார்க்கும்போது இது பௌத்த நாடா? என்ற சிந்திக்கவேண்டியிருந்தது என்று அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அனுதாப பிரேரணை உரையின்போது அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
கடந்த மே 9ஆம் திகதியன்று தமது வீட்டுக்கு தீவைத்தது பௌத்த மதகுரு என்றும் அவர் குறிப்பிட்டார்.
கர்தினாலின் கருத்து
இந்தநிலையில் கடந்த மே மாதம் 9 ஆம் திகதியன்று கர்தினாலும் , சோபித தேரரும் தெரிவித்த கருத்துக்கள், தாக்குதல் நடத்துவோரை துாண்டுவதாக அமைந்திருக்கவில்லையா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அத்துடன் ஜேவிபியின் கருத்துக்களும் இதேபோன்றே அமைந்திருந்தன என்றும் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தினார்.



















