நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு பொதுத் தேர்தல் நடத்துவதேயாகும் என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பீட உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி.லால்காந்த தலாத்துஓயா பிரதேசத்தில் வைத்து இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தேர்தலை தவிர்ப்பதற்கு நடவடிக்கை
தேர்தலை தவிர்ப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் சமூக மற்றும் அரசியல் நெருக்கடி நிலமைகளுக்கு தீர்வு காணக்கூடிய ஒரே வழி அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொள்வதேயாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுத் தேர்தல்
எனவே, பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றை கலைக்குமாறு பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.