கைவிடப்பட்ட அரச காணிகளில் விவசாயம் செய்யும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 24ஆவது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே இன்று காலை கண்டியிலுள்ள பல்லக்கு ஆலயத்திற்கு சென்றுள்ளார்.
அரச காணிகளில் புதிய திட்டம் ஆரம்பம்
இதன்போது இராணுவத் தளபதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கை இராணுவத்தில் பயிர்ச்செய்கைக்கான பணிப்பாளர் சபையொன்று உள்ளது.
பயிர்ச்செய்கை வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு படையினரும், மேலதிக படையினரும் ஈடுபடுத்தவுள்ளனர்.
கைவிடப்பட்ட அரச காணிகளில் விவசாயம் செய்யும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவம் தயாராகும் யுத்தம்
மக்களுக்காக உழைக்க எந்த நேரத்திலும் தயாராக இருக்கும் இலங்கை இராணுவம் பயிர்ச்செய்கை யுத்தத்திற்கு தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.