தற்போதைய உயர்மட்ட பணவீக்கம் இன்னும் இரண்டரை வருடங்களுக்கு தொடரும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கம்
தற்போதைய பணவீக்க வீதம் எதிர்காலத்தில் ஸ்திரமாக இருந்தாலும், அதிகரித்துள்ள பொருட்களின் விலைகள் அதே மட்டத்திலேயே இருக்கும்.
மே மாதத்தில் பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் வருடாந்திர புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பணவீக்கம், மே மாதத்தில் 42.03 சதவீதமாக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டள்ளார்.
அதன்படி, ஏப்ரல் மாதத்தில் 45 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் மே மாதத்தில் 58 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் உணவு அல்லாத பணவீக்கம் 23.9 சதவீதமாக இருந்தது.
உணவு அல்லாத பணவீக்கம் மே மாதத்தில் 34.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.