சமையல் எரிவாயு ஏற்றிச் சென்ற வானகத்தை சாலையில் நிறுத்தி பொலிஸ் அதிகாரி ஒருவர் சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்வதுபோன்ற காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதில் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு
இந்த நாட்களில் சமையல் எரிவாயுவிற்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. பொதுச் சந்தைக்கு எரிவாயு விநியோகிப்பதை லிட்ரோ நிறுவனம் இடைநிறுத்தியுள்ளதுடன், அடுத்த கப்பல் வரும் திகதியும் அறிவிக்கவில்லை.
இதற்கிடையில், பல மாதங்களுக்குப் பிறகு, லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் மிகக் குறைந்த அளவில் எரிபொருளை விநியோகித்து வருகிறது, மேலும் மக்கள் அதைப் பெற நீண்ட நாட்களாக வரிசையில் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.