முறையான வழிகளில் இலங்கைக்கு பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கோரி அமைச்சரவையில் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் பணத்தின் அளவை பொறுத்து அவர்களுக்கு இந்த வசதி வழங்கப்படும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது வாகன இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதால், மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் சட்டப்பூர்வ வழிகள் மற்றும் வங்கி மூலம் பணம் அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
சார்ஜிங் வசதியும் அறிமுகம்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிமுகப்படுத்தியுள்ள வேலை வாய்ப்புகளை வழங்கும் திட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, பிரதான மின்சக்தி அமைப்புக்கு வெளியே சூரிய சக்தியுடன் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கும் ரீசார்ஜ் செய்வதற்கும் புதிய சார்ஜிங் வசதியும் அறிமுகப்படுத்தப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.