தமிழ் நாட்டின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற துறைமுகங்களுக்கும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான சரக்கு படகு சேவை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் நாட்டின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற துறைமுகங்களுக்கும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான சரக்கு படகு சேவை கூடிய விரைவில் ஆரம்பிக்கப்படும்.
பலாலி – திருச்சி, சென்னை இடையிலான விமான சேவை ஆரம்பம்
குறித்த படகு சேவை மூலம் தேவையான மண்ணெண்ணை, டீசல் போன்ற எரிபொருட்களையும், உரம், பால்மா, மருந்து பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் தேவையானளவு எடுத்துவர முடியும்.
இந்த படகு சேவையை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க முயற்சிகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றமை தெரிந்ததே.
அதேவேளை, பலாலி – திருச்சி, சென்னை இடையிலான விமான சேவையையும் திட்டமிட்டபடி ஜீலை 1 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பட்டுள்ளார்.