கறுப்பு சந்தை வர்த்தகர்களால் எரிபொருள் பதுக்கல் வியாபாரம் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய நிலையில் சில எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுடன் கறுப்புச்சந்தை மாபியா வர்த்தகர்கள் எரிபொருளை பதுக்கி வைத்து இரட்டிப்பு விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
அவசர தேவைகளுக்காக எரிபொருள் பெற்றுக்கொள்ள தவிக்கும் நபர்கள் இவ்வாறானவர்களிடம் ஆயிரம் ரூபா முதல் ஆயிரத்து இருநூறு ரூபா வரை விலை கொடுத்து எரிபொருள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அவசர தேவைக்கான எரிபொருள் விநியோகம்
நேற்றைய தினம் அவ்வாறான அநியாய விலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அவசரத் தேவைக்காக எரிபொருள் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் நிரப்பிக்கொள்ளப்படும் எரிபொருள் குழாய்களின் வழியாக வெளியே எடுக்கப்பட்டு இவ்வாறு கறுப்புச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.