இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 150 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐந்து வாகனங்களை அரசுடமையாக்கவுள்ளதாக சுங்கப் பேச்சாளர் சுதத் டி சில்வா தெரிவித்துள்ளார்.
உதிரி பாகங்கள் என்ற போர்வையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 150 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அதிசொகுசு வாகனங்கள்
இரண்டு கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட அதிசொகுசு வாகனங்களை இலங்கைக்கு விடுவிக்கப்படவிருந்த இருவர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
விசாரணைகளில் இருவரும் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்தால் சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு பொருட்களின் மதிப்பை விட மூன்று மடங்கு அதிக அபராதம் செலுத்த வேண்டும் என என சுங்கப் பேச்சாளர் சுதத் டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதிகளவான அபராதம்
பிரித்தானியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 5 சொகுசு வாகனங்கள், இலங்கை சுங்கத்தின் ஒருகொடவத்தை பண்டகசாலையில் மீட்கப்பட்டுள்ளன.
அவுடி, பென்ஸ், பீ.எம்.டபிள்யூ மற்றும் ஃபியட் ஆகிய அதிசொகுசு ரக வாகனங்களே இவ்வாறு மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.