மட்டக்களப்பில் யானைத் தந்தம் வைத்திருந்த நபரொருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
புலனாய்வுப் பிரிவிற்கு தகவல்
யானைத் தந்தம் தொடர்பில் அம்பாறை விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு பிரவுன்ரி வீதியில் திடீர் சோதனை நடத்தப்பட்ட போது யானைத் தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு – கல்லடி, வேலூர் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
யானைத் தந்தங்கள் பறிமுதல்
கைப்பற்றப்பட்ட யானைத் தந்தங்கள் இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்களப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.