கடந்த ஜுன் 3ம் தேதி படு மாஸாக வெளியான திரைப்படம் தான் கமல்ஹாசனின் விக்ரம்.
கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஃபகத் பாசில், விஜய் சேதுபதி இணைந்தது எல்லாம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
படமும் ரிலீஸ் ஆகி ஓஹோ என ஓடிக் கொண்டிருக்கிறது, 25 நாட்களுக்கு மேல் ஆகியும் இப்போது 150 திரையரங்குகளுக்கு மேல் ஓடிக் கொண்டிருக்கிறது.
பாக்ஸ் ஆபிஸ்
படம் ரிலீஸ் ஆன நாள் முதல் நல்ல வசூல் வேட்டை நடத்துகிறது, தமிழில் சாதனை செய்ததோடு மற்ற மொழிகளிலும் விக்ரம் டாப் வசூலை பெற்றிருக்கிறது.
தற்போது வரை உலகம் முழுவதும் படம் ரூ. 385 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது, விரைவில் ரூ. 400 கோடியை எட்டுமா என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் புதுப்படங்கள் ரிலீஸ் ஆகிவரும் நிலையில் விக்ரம் ரூ. 400 கோடியை எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.