எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முச்சக்கர வண்டியொன்றின் மூலம் எரிபொருள் மோசடியில் ஈடுபட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் இன்று வைரலாகியுள்ளது.
முச்சக்கர வண்டியின் தாங்கிக்குள் அதிகளவில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மேலதிகமாக கேன் ஒன்றை மறைத்து வைத்திருந்தமை இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களை பரிசோதிக்க நடவடிக்கை
இதேவேளை, மாத்தளை மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை இன்று பரிசோதிக்க நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, எரிபொருள் தீர்ந்துவிட்டதாகக் கூறி மக்களை திருப்பியனுப்பிய மாத்தளை, உக்குவெல பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 1400 லீட்டர் பெட்ரோல் மற்றும் 1600 லீட்டர் டீசல் மறைத்து வைக்கப்பட்டிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.