ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைத்தீவிற்கு தப்பிச்சென்ற நிலையில், அந்நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள சொகுசு விடுதியில் தங்கியிருக்க பெருந்தொகை பணத்தினை செலவிட்டுள்ளதாக இந்திய ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையிலிருந்து வெளியேறியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் நேற்று அதிகாலை மாலைத்தீவை சென்றடைந்தார்.
இந்நிலையில்,கோட்டாபய ராஜபக்ச மாலைத்தீவிற்கு சென்றடைந்த போது அங்குள்ள இலங்கையர்கள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு கடும் அழுத்தத்தினை பிரயோகித்திருந்தனர்.
மாலைத்தீவு சொகுசு விடுதியில் தங்கியுள்ளதாக தகவல்
இதனை தொடர்ந்து மாலைத்தீவில் உள்ள தென்பகுதியில் அமைந்துள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்ததாகவும்,அங்கு ஒரு இரவு தங்குவதற்கு இலங்கையின் பணம் சுமார் 18 இலட்சம் ரூபா செலவிட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், நேற்றிரவு மாலைத்தீவில் இருந்து SQ437 விமானம் மூலம் சிங்கப்பூர் செல்லவிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 23.35 மணிக்கு சிங்கப்பூர் செல்ல ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், மாலைத்தீவை விட்டு வெளியேற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைத்தீவு அரசாங்கத்திடம் தனியார் ஜெட் விமானம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.