நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து அவரை பதவியில் இருந்து நீக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் தொடர்பில் ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுஜன பெரமுன ஆதரவு
இதற்கு பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று தமது ஆதரவை வழங்கும் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரேரணையை சபாநாயகருக்கு விரைவில் அறிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.