இலங்கைக்கு பொருளாதார ஆதரவை வழங்குவதன் மூலம் நாட்டை ஸ்திரப்படுத்த எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு பொருளாதார ஆதரவை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கலந்துரையாடல் திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ், டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கையில் நிலவும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக குழப்பங்கள் ஓரளவுக்கு தணியும் வரை இலங்கையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது