இன்றைய தினம் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று இந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளது.
இதேவேளை இன்றைய தினம் நடைபெறவிருந்த நாடாளுமன்ற அமர்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பதவி விலகல் தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் தொடர்பில் இன்றைய தினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன இன்று காலை இந்த அறிவிப்பினை வெளியிடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் சபாநாயகர் அலுவலகத்திற்கு கிடைக்க பெற்றுள்ளதாகவும், அதன் சட்டபூர்வ தன்மையை சட்ட மா அதிபர் சஞ்சய ராஜரட்னம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சட்ட மா அதிபர் இந்த கடிதத்தின் சட்டபூர்வ தன்மையை உறுதி செய்ததும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியமை தொடர்பில் சபாநாயகர் இன்று நாட்டு மக்களுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார்.