நயன்தாரா தென்னிந்திய கதாநாயகிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். இவரது படங்கள் நல்ல வசூல் குவிப்பதால் ஒவ்வொரு படத்திலும் சம்பளத்தை உயர்த்தி வருகிறார்.
சில வருடங்களுக்கு முன்பு வரை ரூ.3 கோடி வாங்கிய அவர் பின்னர் அதை ரூ.5 கோடியாக உயர்த்தினார். இறுதியாக ரூ.6 கோடி முதல் ரூ.7 கோடி வரை வாங்கி வந்தார். தற்போது இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் நடிப்பதால் சம்பளத்தை மேலும் உயர்த்தி இருக்கிறார்.
கடந்த வருடம் ரூ.10 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் கசிந்தது. தற்போது அவர் நடிக்கும் புதிய தமிழ் படத்துக்கு ரூ.10 கோடி சம்பளத்தை உறுதி செய்து இருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது. இந்த படத்துக்கு அன்னபூரணி என்ற பெயரை வைக்க படக்குழுவினர் பரிசீலிப்பதாகவும், ஓட்டல் தொழில் செய்யும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. திருமணத்துக்கு பிறகும் நயன்தாரா மார்க்கெட் உயர்ந்து வருவது சக நடிகைகளுக்கு பொறாமையை ஏற்படுத்தி உள்ளது.