கோட்டா கோ கோம் ஆர்ப்பாட்ட தலைவர்களால் கையளிக்கப்பட்ட யோசனைகளில் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் பேரவை நல்ல திட்டமாக ஏற்றுக்கொள்ளப்படுவதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று காலை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பதில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. .
ஊழலுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தெரிவிப்பதாகவும் பதில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொருளாதார அழுத்தத்தில் உள்ள மக்களின் சுமையைக் குறைக்க எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்கான விரைவான நிவாரணத் திட்டத்தைத் தொடங்க பதில் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் சமர்ப்பிக்கப்படும் நிவாரண வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக மேலதிக நிதியை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.