யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு தேவாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 20 பவுண் தங்கள் நகைகள் திருடப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், கணவன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் அவரது மனைவியும் ஒரு பிள்ளையும் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
அச்சுறுத்தல்
இந்நிலையில் நேற்றிரவு வீட்டினை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த 3 திருடர்கள் வீட்டில் இருந்த குடும்பப் பெண்ணையும் பிள்ளையையும் மிரட்டி 20 பவுண் தங்க நகைகளை களவாடிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.