சுகாதார ஊழியர்கள் ஒன்றிணைந்து நாளை காலை 10 மணி முதல் பி.பகல் 2 மணி வரை தமது பணிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
நாளை (19) ஆம் திகதி முதல் தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அவர்கள் இவ்வாறு புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பதில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணிலுக்கு ஜனாதிபதியாக வாய்ப்பு வழங்க கூடாது, எரிபொருள் உணவு போக்குவரத்து வசதிகள் மருந்துகளை வழங்க முடியாத அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என தெரிவித்து அவர்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.