பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 25ஆம் திகதி முதல் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையவழி கற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2022ஆம் ஆண்டின் முதலாம் தவணை, செப்டெம்பர் 7ஆம் திகதி வரையில் நீடிக்கப்படவுள்ளது.
இரண்டாம் மற்றும் 3ஆம் தவணையை நடத்துவதற்கான கால எல்லை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு கூறியுள்ளது.
முதலாம் தரம் தொடக்கம் 11ஆம் தரம் வரையில், திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி முதல் அது தொடர்பான கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
எனினும் முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளுக்கான விடுமுறை
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டிருந்த விடுமுறை நீடிக்கப்படுவதாக நேற்றைய தினம் கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
அந்த வகையில் எதிர்வரும் 25ஆம் திகதியே பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்னர் எதிர்வரும் 21ஆம் திகதி கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.