52 வாக்குகள் வித்தியாசத்தில் இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை அவர் ஆற்றியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது என்னுடைய கடமை. பொருளாதார ரீதியாக இந்த நாடு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.
அத்துடன் இதன்போது டலஸ் அழகப்பெரும, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, அநுரகுமார திசாநாயக்க, சஜித் பிரேமதாச மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியோரை ஒன்றிணைந்து செயற்பட ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்கால திட்டங்கள் தொடர்பில் நாளைய தினம் இவர்களுடன் சந்திப்பொன்று நடத்தப்படும் என கூறியுள்ளார்.