இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இன்று காலை பத்து மணியளவில் நாடாளுமன்ற கட்டட தொகுதிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் சபாநாயகர், படைகள சேவிதர், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரால் வரவேற்கப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து பதவிப்பிரமாணம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்னும் சற்றுநேரத்தில் ரணில் விக்ரமசிங்க பதவியேற்கவுள்ளார்.
இதற்கான நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
பதவியேற்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் சபாநாயகர், படைகள சேவிதர், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வரவேற்றுள்ளனர்.
முதலாம் இணைப்பு
ரணில் விக்ரமசிங்க 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
இந்த பதவியேற்பு நிகழ்வு இன்றைய தினம் காலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.