போர்த்துக்கேயர், ஆங்கிலேயர், டச்சு காலங்களிலிருந்து இந்நாட்டில் நிலவிய மேட்டுக்குடி அரசியலின் இறுதிக் வாரிசு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்தார்.
இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கு ரணில் விக்ரமசிங்கவிடம் குறிப்பிட்ட தீர்வுகள் இருப்பதாக தமக்கு நம்பிக்கை இல்லை என ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை கொண்டவர்கள் நாட்டில் இருப்பதால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து 3 மாதங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என அத்துரலியின் ரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.