மேற்கு லண்டன் என்ஃபீல்டில் உள்ள ராம்மே மார்ஷ், ஹேய்ஸில் உள்ள கிரான்ஃபோர்ட் பூங்கா மற்றும் தேம்ஸ்மீட் ஆகியவற்றில் காட்டு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சர்ரேயில் உள்ள தீயணைப்பு சேவை தீப்பரவலை கட்டுப்படுத்த போராடி வருதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீப்பரவலை அடுத்து மேற்கு லண்டனில் உள்ள மக்கள் தங்கள் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சர்ரேயில், ஃபார்ன்ஹாமுக்கு அருகிலுள்ள ஹாங்க்லி காமன் என்ற இடத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக புகை மூட்டமாக உள்ளது, எனவே தயவுசெய்து அந்தப் பகுதியைத் தவிர்க்கவும், அருகில் இருப்பவர்கள் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் மூடிவிட வேண்டும் எனவும் செல்லப்பிராணிகளை வீட்டிற்குள் வைத்திருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை சம்பவமாக விபரிப்பு
இந்த சம்பவத்தின் விளைவாக சில உள்ளூர் சாலைகள் மூடப்பட்டுள்ளன. லண்டனில் உள்ள தீயணைப்புக் குழுவினரும் காட்டுத் தீயை எதிர்த்துப் போராடி வருகின்றனர். லண்டன் தீயணைப்புப் பிரிவு (LFB) இந்த சம்பவங்களை வானிலை தொடர்பானது என்று விவரித்துள்ளது.
எப்பிங் வனப்பகுதிக்கு அருகில் உள்ள என்ஃபீல்டில், நான்கு கால்பந்து மைதானங்கள் அளவுக்கு வளர்ந்திருந்த புல் தீயை அணைக்க சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக லண்டன் தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
பார்பிக்யூக்கள் மற்றும் சிகரெட்டுகளை சரியாக அப்புறப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் மேலும் தீ விபத்துகளைத் தடுக்க உதவுமாறு சேவை மக்களை வலியுறுத்தியது.
இதேவேளை, தீப்பரவல் காரணமாக ஏற்பட்ட புயைினால் ஹீத்ரோ விமான நிலையத்தில் பார்வைத் திறன் குறைந்து வருவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.