யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேச செயலக பிரிவு மற்றும் கரவெட்டி பிரதேச செயலக பிரிவு ஆகியவற்றுக்கு எரிபொருள் நிரப்பு அட்டையின் ஊடாக நாளை (27-07-2022) நுணாவில் லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் விநியோகிக்கப்படும் என எரிபொருள் நிலையத்தின் உரிமையாளர் வை. சிவராசா தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் வை.சிவராசா,
தென்மராட்சி பிரதேச செயலக பிரிவிலுள்ள 51 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு இதுவரை பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள 9 கிராம அலுவலர் பிரிவுகளான J/331,J/332, J/333,J/334, J/335, J/336, J/337,J/338, J/339 ஆகியவற்றுக்கு நாளை 28 ஆம் திகதி வியாழக்கிழமை விநியோகிக்கப்படும்.
மேலும் கரவெட்டி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட J/348, J/349, J/350, J/351, J/352, J/353, J/354, J/355, J/356,J/ 357,J/358,J/359, J/360 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் நாளைய தினம் பெற்றோல் விநியோகிக்கப்படும்.
இருந்தபோதிலும், இந்தப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுள் எரிபொருள் நிரப்பு அட்டையை பயன்படுத்தி இதுவரை ஒரு தடவையேனும் பெற்றோலைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கே நாளை பெற்றோல் விநியோகிக்கப்படும் என்றார்.