ராஜபக்சக்களால் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த (Sanath Nishantha) தெரிவித்துள்ளார்.
நேற்றைய முன்தினம் (2-7-2022) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது பலத்தை வெளிப்படுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தாடி வைத்த போதைக்கு அடிமையானவர்களால் ராஜபக்சக்களை விரட்டியடிக்க முடியாது.
போதைப்பொருள் மற்றும் பனிக்கட்டிகளுக்கு அடிமையானவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் என்ற போர்வையில் ஒரு அரசாங்கத்தை கவிழ்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள், என்றார்.
எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது பலத்தை வெளிப்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மேலும் தெரிவித்துள்ளார்.