சினிமாவுல கூட இந்த மாதிரி பண்ணது இல்லையே பூர்ணா!
ஹாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் என்றால் அது டைட்டானிக் படம் தான். 1997-ல் திரைக்கு வந்த டைட்டானிக் படம் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றது.
இந்த படம் உலகில் அதிகம் வசூலித்த படங்கள் பட்டியலில், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், அவதார் படங்களுக்கு அடுத்து 3-வது இடத்தில் இருக்கிறது.
11 ஆஸ்கார் விருதுகளையும் பெற்றது. இன்றளவும் டைட்டானிக் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், டைட்டானிக் உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், பிரபல பிரிட்டன் நடிகருமான டேவிட் வார்னர், புற்றுநோயால் 80 வயதில் நேற்று முன்தினம் காலமானார்.
இவர், 70 களில் வெளியான ஓமன், டாரன் ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார். 1997-ல் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் படத்திலும் நடித்துள்ளார்.