இங்கிலாந்து மருத்துவமனை ஒன்றில் ஏழு பச்சிளம் குழந்தைகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள செவிலியர் ஒருவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
இங்கிலாந்திலுள்ள Cheshire என்ற இடத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில், பச்சிளம் குழந்தைகள் அனுமதிக்கப்படும் வார்டில் பணியாற்றிவந்த லூசி (Lucy Letby, 32) என்ற பெண் செவிலியர் மீதுதான் ஐந்து ஆண் குழந்தைகள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் ஐந்து ஆண் குழந்தைகளையும், ஐந்து பெண் குழந்தைகளையும் கொலை செய்ய முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதேவேளை லூசி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிலையில், அவர் மான்செஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அக்டோபர் மாதம் 4ஆம் திகதி லூசி மீதான வழக்கு விசாரணை துவங்க உள்ளது.