பிரான்ஸில் சுகாதார அதிகாரிகள் என கூறி பொது மக்களின் தரவுகளை திருடும் நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வருவது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
FranceConnect கணக்குகளை பயன்படுத்தி சுகாதார அமைச்சில் இருந்து அழைப்பேற்படுத்தியதாக கூறி மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
FranceConnect கணக்குகளில் பொது மக்களின் வரி மற்றும் மருத்துவத் தகவல்களை அணுகலாம், வங்கிக் கணக்கைத் திறக்கலாம், அடையாள அட்டைகள், பிரான்ஸ் கடவுச்சீட்டுகள் அல்லது ஓட்டுநர் உரிமங்களை புதுப்பித்தல், புதிய காரை பதிவு செய்தல் அல்லது பயன்பாட்டு பட்டியல்களை கையாளுவதற்கும் உதவுகின்றது.
கிட்டத்தட்ட 20 மில்லியன் பிரான்ஸ் மக்கள் இந்த கணக்குகளை பயன்படுத்தி வரும் நிலையில் மோசடியாளர்கள் தற்போது இந்த கணக்குகளை குறி வைத்துள்ளனர்.
மோசடியாளர்கள் இந்த கணக்கின் அணுகலைப் பெறவும் கணக்களுக்குள் உடுருவதற்கும் பயனர்களின் தனிப்பட்ட தரவை தொலைபேசி மூலம் பெற முயற்சிக்கின்றனர் என தெரியவந்துள்ளது.
09 85 40 40 44 இந்த இலக்கங்களை கொண்டு மோசடியாளர்கள் அழைப்புகளை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக பொது மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அழைப்பேற்படுத்தும் நபர்கள் தாம் சுகாதார அமைச்சில் இருந்து அழைப்பேற்படுத்துவதாகவும் தான் உண்மையான அதிகாரிகள் என்பதனை உறுதிப்படுத்துவதற்காகவும் சில தகவல் தகவல்களை வழங்குவதாகவும் குறிப்பிடவதாகவும் தெரியவந்துள்ளது.
அழைப்பேற்படுத்தும் நபர்கள் கொரோனா தடுப்பூசி தொடர்பிலான தகவல்களை கோருவதாகவும் கார்த் விதல் அட்டையின் இலக்கத்தை வழங்குமாறும் கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுகாதார அமைச்சினால அவ்வாறான அழைப்புகள் எதுவும் ஏற்படுத்துவதில்லை எனவும் அழைப்பேற்படுத்துபவர்களிகளிடம் தகவல் வழங்க வேண்டாம் எனவும் பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.