அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு(Joe Biden) கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஜோ பைடனை(Joe Biden) டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது.
இதற்கிடையே,அதிபர் ஜோ பைடன்(Joe Biden) கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டார்.என அதிபரின் டாக்டர் கெவின் ஓகானர்(Kevin O’Connor) தெரிவித்தார்.
இந்நிலையில்,ஜனாதிபதி ஜோ பைடனுக்கு(Joe Biden) நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று மீண்டும் உறுதியானது. இதனால் மீண்டும் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என டாக்டர் குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.