ஆடவர் ஆசியக் கோப்பை டி20 போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது, முதல் கிரிக்கெட் போட்டியில் இலங்கை ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
இலங்கையில் நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டி தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு (UAE) மாற்றப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 27 ஆம் திகதி தொடங்கும் போட்டியின் அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது, இதேவேளை, செப்டம்பர் 11 ஆம் திகதி இறுதிப் போட்டிகள் நடைபெறும்.
போட்டிகள் ஷார்ஜா மற்றும் துபாய் மைதானத்தில் நடைபெறவுள்ளது.




















