திருமணமான தம்பதிகள் பொதுவாக தேனிலவுக்கு குளிர்பிரதேசமான இடங்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம்.
ஆனால், இங்கு ஒரு தம்பதிகள் நீண்ட காலமாக தேனிலவு கொண்டாடி வரும் தகவல் பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
அமெரிக்கா நாட்டின் நியூ ஜெர்சியில் வசிக்கும் தம்பதி மைக் ஹாவர்ட், ஆன். இவர்கள் இருவரும் கடந்த 2022ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகள் இதுவரை 64 நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
திருமணத்திற்கு பின் இந்த தம்பதிகள் தேனிலவு சுற்றுப்பயணத்திற்காக இந்த தம்பதிகளுக்கு விருப்பம் அதிகம் என்பதால், தேனிலவை கொண்டாடினர்.
ஆனால், அது தொடரவே தேனிலவுக்காக வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என கடந்த 10 ஆண்டுகளாக இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது ஆசிய கண்டமாக இந்தியாவில் முகாமிட்டுள்ள இந்த தம்பதி, கேரளாவில் தேனிலவை கொண்டாடி வருகின்றனர். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.