மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் பிரேக்ஃபாஸ்ட்டை விமானத்தில் கொண்டு சென்ற ஒரு நபருக்கு ரூ.2,00,000 அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் தகவல் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
பிரேக்ஃபாஸ்ட் வாங்கிக் கொண்டு பாலியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு நபர் ஒருவர் விமானப் பயணம் மேற்கொண்டார்.
அந்த உணவின் விலை சில நூறு ரூபாய்கள் தான்.
மெக்டொனால்ட் உணவுடன் ஆஸ்திரேலியாவில் தரையிறங்கிய நபரின் பையை மோப்ப நாய் கண்டுபிடித்தது.
உடனடியாக அவரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். மெக்டொனால்ட் வழங்கிய பிரேக் ஃபாஸ்ட் உணவில் இரண்டு முட்டைகள் மற்றும் ஒரு பீஃப் ஸாஸேஜ் மஃபின்ஸ் மற்றும் ஒரு ஹாம் க்ரோசாய்ன்ட் ஆகியவை இருந்தன.
பாலியில் விமானம் ஏறிய பொழுது அங்கிருக்கும் அதிகாரிகளுக்கு உணவைப் பற்றி தவறான தகவலை வழங்கியதாக அபராதம் கட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
விமான நிலைய அதிகாரிகளால் இந்திய மதிப்பில் ரூபாயில் கிட்டத்தட்ட ₹2,00,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேவேளை, ஒவ்வொரு நாடும் ஒரு சில உணவுகளை தடை செய்துள்ளது. அதேபோல ஒருசில உணவுகளை விமானத்தில் கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
பலருக்கும் இதை பற்றிய விவரங்கள் முழுதாகத் தெரிவதில்லை. எல்லா பயணிகளும் தாங்கள் செல்லும் நாடு அதற்கான விதிமுறைகள் ஆகியவற்றை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.