கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து பயணித்த தொடருந்தில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த தபால் தொடருந்து இன்று காலை திருகோணமலை நோக்கி பயணித்துள்ளது.
இதன்போது சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீவரகம பகுதியில் குறித்த நபர் தொடருந்தில் மோதியதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
சம்பவத்தில் திருகோணமலை – தீவரகம ரொட்டரி நிவாஸ பகுதியைச் சேர்ந்த பந்துல பீரிஸ் (49 வயது) என, கணவன் மனைவிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கணவன் தொடருந்தின் முன் பாய்ந்ததாக உயிரிழந்தவரின் மனைவி பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.