இலங்கை பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள தருணத்தில், இலங்கைப் படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எதற்கு கூறினார் என்பது தொடர்பில் ஆராய்கின்றோம் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றின் போது இன்று(07) இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதற்கமைய,‘’இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள 58 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 47 உறுப்பு நாடுகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஐ.நா. மனித உரிமைகள்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிவிப்பு தொடர்பில் அரசங்கம் கவனம் செலுத்தும்.
நாடு பல துறைகளில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் எதற்கு இந்த அறிவிப்பு வந்தது என்பது தொடர்பில் ஆராய்வோம்.
இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை மட்டத்தில் ஆராயப்படும். அதன்பின்னரே இலங்கை அரசின் உத்தியோகபூர்வ பதிலை வெளியிடுவோம்’’ என தெரிவித்துள்ளார்.