அங்கு மண்டபம் மரைன் பொலிஸார் நடத்திய விசாரணையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தற்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, விலை கடுமையாக உயர்ந்து ள்ளதால் வாழ வழியின்றி உயிரை காப்பாற்றி கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாகவும் தெரிவித்தனர்.
அதோடு, தாங்கள் நால்வரும் 2006 முதல் 2019 வரை மண்டபம் முகாமில் பதிவில் தங்கி இருந்து மீண்டும் இலங்கைக்கு சென்றதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரணைக்குப் பிறகு 4 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
அதேவேளை இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து தமிழகத்திற்கு டடக்கலம் தேடிச்சென்றோர் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய புதிய தலைமுறை இளைஞர்கள் மத்தியிலே இலங்கையர் என்ற உணர்வு ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
இந்த நாட்டில் இளைஞர்களுக்கு இடம் கொடுப்போம் இளைஞர்களுக்கு தலைமைத்துவம் வழங்குவோம் என கூறிக்கொள்ளும் பெரிய வயதானவர்கள் கடைசி வரை அந்த சந்தர்ப்பத்தை தருவதே இல்லை அப்படியிருக்கக் கூடாது.
கடைசியில் இளைஞர்கள் கிளர்ச்சியில் எழுந்து வந்து அந்த இடத்தை பலாத்காரமாக பிடிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கின்றது. அதற்கு இடம்கொடுக்க கூடாது.
அதேவேளை இளைஞர்களும் கூட, இளைஞர்கள் என்ற ஒரே காரணத்திற்காக தலைவர்கள் ஆகிவிட முடியாது. நேர்மை, தூர பார்வை, ஐக்கியம், ஒற்றுமை இருக்கவேண்டும். குறைந்த பட்சம் இரு மொழிகளை பேச தெரிந்திருக்க வேண்டும் என்றார்.



















